ரஷ்யாவில் தொடரும் மர்ம மரணங்கள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிடித்த பிரபல செய்தித்தாளான Komsomolskaya Pravdaவின் 35 வயதான துணை ஆசிரியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் நடந்த தொடர் மர்ம மரணங்களை நினைவுபடுத்தும் இந்த சம்பவம் அதிகாரிகளையும், பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, அன்னா சரேவாவின் உயிரற்ற உடல் அவரது தந்தையால் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இறப்பிற்கு முன், சரேவா உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அதிக வெப்பநிலை இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த மரணம் தொடர்பிர் உள்ளூர் ஊடகங்கள் ஊகங்களை எழுப்பியுள்ளன. சிலர் கடுமையான இதய செயலிழப்பே மரணத்திற்கு காரணம் என கூறியுள்ளனர்.

இந்த மரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆறு ஆண்டுகள் துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய அன்னா சரேவா, 2023 அக்டோபரில் ரஷ்யாவின் மிகப்பெரிய செய்தி இணையதளமான Komsomolskaya Pravda இல் ஒரு முக்கிய நபராக இருந்தார்.

விளாடிமிர் புடினின் மதிப்பில் இந்த செய்தித்தாள் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றிருந்தது. அவர் ஒருமுறை ஐரோப்பிய ஆணையத்தின் ஆவணத்தில் தனது “பிடித்த செய்தித்தாள்” என்று குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin