சர்வதேச நாணய நிதியத்திடம் முதல் காலாண்டு கடன் வசதி அரசாங்கத்தால் பெறப்பட்டாலும், அரச ஊழல் மற்றும் திருட்டு, வருமான இலக்குகளை அடைய முடியாமை போன்ற காரணங்களினால் இரண்டாம் காலாண்டு தொகை கிடைக்காது போனதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்துடன், வற் வரி மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதீதமாக அதிகரித்தமையினாலேயே இந்த இரண்டாம் கட்ட தொகை கிடைக்கப்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி நாட்டை வங்குரோத்தடையச் செய்த திருடர்களுடன் ஆட்சி செய்ய பயந்தாலும், தற்போதைய ஜனாதிபதி இதற்கு பயப்படாததால் எதற்கும் அஞ்சாமல் தொங்கு பாலத்தில் இருந்து ராஜபக்ச குடும்பத்தை மீட்டு கேக் கூட சாப்பிட்டார்.
நாட்டின் 220 இலட்சம் மக்களை ஜனாதிபதி மறந்து விட்டாலும், நாட்டு மக்களை மறக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் இன்று தனது இறுதி உரையை ஆற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மின்கட்டணத்தை அதிகரித்து வற் வரியை அதிகபட்சமாக விதித்து மக்களை மரணப்படுக்கைக்கு தள்ளி,நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்தை சுவர்க்கலோகத்திற்கு கொண்டு செல்ல ஜனாதிபதி செயல்பட்டுள்ளார்.
வற் வரி அதிகரிப்பால் எரிவாயு,பெற்றோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து மக்களின் வாழ்க்கை சீரழிந்தாலும், ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. ராஜபக்சர்கள் உட்பட மொட்டு மோசடிக்காரர்களை ஜனாதிபதி பாதுகாத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.