2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய மனிதாபிமான கண்ணோட்டம் இருண்ட நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
முரண்பாடு, காலநிலை அவசரநிலைகள் மற்றும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகளினால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
நிலவும் மோதல் காரணமாக காசா மீது உலக நாடுகளின் கவனம் குவிந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகள், சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கும் சர்வதேச உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும் நன்கொடையின் அளவு 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுவையில் குறைவடைந்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்தநிலையில், சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவைக்கு ஏற்ப இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் உதவித்திட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான நன்கொடை 56.7 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது இந்தத் தொகையில் வெறும் 35 வீதம் மாத்திரமே கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நிலையானது மிகவும் மோசமான நிதி பற்றாக்குறையாக பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வருடம் 128 மில்லியன் மக்களுக்கு உதவி மற்றும் பாதுகாப்பை வழங்கவேண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 46.4 பில்லியன் டொலர் தேவைப்படுவதாகவும், தீவிர தேவை உடையவர்கள் மீது அதிக கவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.