அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளன.
இதற்கமைய அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.
அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரியே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தமது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட மாட்டாது எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.