இன்று மினி ஏலம் 165 வீராங்கனைகளில் யாருக்கு ஜாக்பாட்?

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று மாலை மும்பையில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் உள்ள சுவாரஸ்யங்கள் குறித்து பார்க்கலாம்.

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று மாலை 3 மணிக்கு மும்பையில் தொடங்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க 104 இந்திய வீராங்கனைகள், 61 வெளிநாட்டு வீராங்கனை உட்பட மொத்தமாக 165 வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர்.

அதிலும் அசோசியேட் நாடுகளை சேர்ந்த 15 வீராங்கனைகள் பதிவு செய்துள்ளதால், மினி ஏலம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த 165 வீராங்கனைகளில் 56 வீராங்கனைகள் தேசிய அணிக்காக ஆடியவர்களாகவும், 109 வீராங்கனைகள் உள்ளூர் வீராங்கனைகளாகவும் உள்ளனர்.

ஆனால் 5 அணிகளின் மொத்த தேவையே 21 உள்ளூர் வீராங்கனைகள் மற்றும் 9 வெளிநாட்டு வீராங்கனை என்று 30ஆக மட்டுமே உள்ளது. அடுத்த சீசனுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் பிப்ரிவரி – மார்ச் மாதங்களில் நடக்கவுள்ளது.

கடந்த சீசன் மும்பையில் மட்டும் நடத்தப்பட்ட நிலையில், இந்த சீசன் மும்பை மற்றும் பெங்களூருவில் நடக்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் குஜராத் மற்றும் ஆர்சிபி அணிகள் தீவிரமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

ஏனென்றால் கடந்த சீசனில் 4 மற்றும் 5 ஆகிய இடங்களை பிடித்ததால், அணிகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை கணக்கிட்டு மினி ஏலத்தில் அந்த இரு அணிகளின் நிர்வாகங்களும் ஈடுபடும் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த மினி ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டோட்டின், ஆஸ்திரேலியா வீராங்கனை கிம் கார்த், ஆனாபெல், ஜார்ஜியா, ஷப்னிம் இஸ்மாயில், ஏமி ஜோன்ஸ், டேனியல் வியட் உள்ளிட்ட வீராங்கனைகளை வாங்க பல்வேறு அணிகளும் போட்டியிடும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய வீராங்கனைகளில் வேதா கிருஷ்ணமூர்த்தி, பூனம் ராவத், சுஷ்மா வர்மா, ஏக்தா பிஸ்த், சுல்தானா, மோனா உள்ளிட்டோருக்கு போட்டி ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin