பப்பாளி பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

பொதுவாக நன்மைகளை குவிக்கும் பழங்களில் ஒன்றாக பப்பாளி பார்க்கப்படுகின்றது.

ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் என்றாலும் அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.

பப்பாளி இயற்கையாகவே வைட்டமின் சி இருக்கின்றது. இது ப்பெய்ன் எனப்படும் செயலில் உள்ள நொதிய உற்பத்திக்கு உதவியாக இருக்கின்றது.

மேலும் மலச்சிக்கல் பிரச்சினையிருப்பவர்கள், சரும பராமரிப்பை தொடர வேண்டும் நினைப்பவர்கள் தாரளமாக பப்பாளி பழத்தை எடுத்து கொள்ளலாம்.

இவ்வளவு நன்மைகள் இருக்கும் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் தீமைகளும் இருக்கின்றது. இது தொடர்பாக தெளிவாக தெரிந்து கொள்வோம்.

மறந்தும் சாப்பிடாதீங்க..

1. சிலருக்கு பப்பாளி சாப்பிட்ட பின்னர் அரிப்பு, வீக்கம், படை நோய் போன்ற ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். பப்பாளி சாப்பிட்ட பின்னர் இப்படியான அறிகுறிகள் காணப்படுமாயின் பப்பாளி சாப்பிடுவதை குறைப்பது நல்லது.

2. பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பப்பாளி பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனின் பப்பாளி பழத்தில் பப்பைன் எனப்படும் நொதி உள்ளது. இது கருப்பை-தூண்டுதல் விளைவை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கின்றது.

3. தினமும் பப்பாளி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் இரைப்பை குடல் அசௌகரியம் அல்லது எரிச்சல், வீக்கம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். குறிப்பாக பழுக்காத பப்பாளி பழங்களை சாப்பிட்டாலும் இது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

4. இரத்தம் உறைதல் குறைபாடுகள் காரணமாக மருந்துகள் எடுப்பவர்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனின் பப்பாளியில் உள்ள வைட்டமின் கே இரத்தம் உறைதலை அதிகப்படுத்தலாம்.

5. இதயம் சார்ந்த பிரச்சினைகள் குறிப்பாக துடிப்பதில் பிரச்சினை இருப்பவர்கள் பப்பாளி பழத்தை தவிர்ப்பது நல்லது. ஹைட்ரஜன் சயனைடை உற்பத்தி செய்யக்கூடிய அமினோ அமிலமான சயனோஜெனிக் கிளைகோசைடுகள் பப்பாளியில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Recommended For You

About the Author: webeditor