பெற்றோலின் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக முதல் கிலோமீற்றர் முச்சக்கரவண்டிக்கு கட்டணம் 90 ரூபாய் அறவிடப்படும் என இலங்கை சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் மகிந்த குமார நேற்று தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 100 ரூபாய் கட்டணத்தில் பயணிகள் போக்குவரத்தை ஆரம்பித்த அனைத்து முச்சக்கர வண்டிகளும் 90 ரூபாவில் பயணிக்க ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
100 ரூபாயுடன் பயணத்தை ஆரம்பிக்காத முச்சக்கரவண்டிகள் தொடர்பில் கேள்வி கேட்க பயணிகளுக்கு உரிமை உண்டு எனவும், அவ்வாறான முச்சக்கர வண்டிகளை நிராகரிக்குமாறும் பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெற்றோல் விலை குறைக்கப்படும் போது பயணிகளுக்கு நிவாரணம் வழங்குவது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு முச்சக்கர வண்டி சாரதியின் பொறுப்பும் கடமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முச்சக்கர வண்டி சாரதியும் முதல் கிலோமீட்டருக்கு 90 ரூபாவும் இரண்டாவது கிலோமீட்டருக்கு 90 ரூபாவும் பயணிகளிடம் வசூலிக்குமாறும் தலைவர் கேட்டுக்கொள்கிறார்.