இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் முட்டையின் விலையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தன.
இந்த நிலையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முட்டையின் விலை சற்று குறைவடைந்து வருகின்றன.
இதன்படி, முட்டையை 40 ரூபா முதல் 43 ரூபாவுக்கு மக்கள் கொள்வனவு செய்ய முடியுமென விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், முட்டையின் விலை குறைந்ததற்கு உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரித்தமையே காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் தை மாதம் முதல் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.