அறநெறிப் பாடலை மாணவர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி

முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடலை மாணவர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி
==================================================

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து சமய அறநெறிப் பாடலை மாணவர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி இன்றைய தினம் (03.12.2023) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர். திரு அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இப்பயிற்சி நெறியில் முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் நூறு அறநெறி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் வரவேற்புரையிணை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சிவானந்தம் மோகனராசா அவர்கள் நிகழ்த்தினார்.இந் நிகழ்வில் கல்வி அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் திரு. உடுவை எஸ்.தில்லைநடராசா ,மற்றும் சைவப்புலவர், பாலன் சுதாகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தலைமைத்துவம் தொடர்பான அடிப்படை விடயங்கள்,வாழ்க்கையின் உயர் இலட்சியங்களை நிர்ணயித்துக் கொள்வது அதனை அடைவதற்கான வழிமுறைகள், தலைமைத்துவத்திற்கு தேவையான ஆளுமைப் பண்புகளை விருத்தி செய்வதற்கான வழிமுறைகள், சமயம் காட்டும் விழுமிய வாழ்வு – சமய வாழ்வில் சமூகப் பணி என்பவை உட்பட பல்வேறு விடயங்கள் இப்பயிற்சியில் உள்ளடக்கப்பட்டிருந்து.

இந் நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் பங்குபற்றிய மாணவர்களிற்கு சான்றிதழ்களும் தலைமைத்துவத்துடன் தொடர்புடைய நூல்களும் வழங்கிவைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: S.R.KARAN