ஜேர்மன் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு!

ஜெர்மனியில் உள்ள ஹேம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்திற்குள் காரில் மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்துள்ளனர்.

குறித்த நபர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்ட நிலையில், வானை நோக்கி 2 முறை சுட்டுள்ளார். காரிலிருந்து, எரிந்து கொண்டிருந்த இரண்டு பாட்டில்களையும் எடுத்து, தூக்கி வீசியுள்ளார்.

இதனால், பயணிகள், அவர்களின் உறவினர்கள் என அந்த பகுதியில்இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதுபற்றி தகவல் அறிந்ததும், பொலிஸார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர்.

இதில், பாதுகாப்பு பகுதியை உடைத்து கொண்டு அந்த வாகனம் சென்றதும், காரில் 2 குழந்தைகள் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, விமான சேவை நிறுத்தப்பட்டதுடன், அனைத்து முனையங்களிலும் உள்ள நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் விமான நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளும்படி, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த துப்பாக்கி சூட்டில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன் அவருடைய மனைவி பொலிஸாரை தொடர்பு கொண்டு, அந்த நபர் 2 குழந்தைகளையும் கடத்தி கொண்டு செல்கிறார் என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor