லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் விஜய் குட்டி கதையை கூறியுள்ளார். நம்மால் எது முடியாதோ அதில் ஜெயிக்கிறதுதான் வெற்றி என்பதை மையப்படுத்தி சுவாரசியமான கதையை சொல்லியுள்ளார் விஜய். ஒரு காட்டுல காக்கா, கழுகுன்னு நெறய மிருகங்கள் இருந்துச்சு என்று தொடங்கிய இந்த கதை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரூ. 540 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது-
ஒரு குட்டி கதை சொல்கிறேன். ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நெறய மிருகங்கள் இருந்துச்சு. (விஜய் காக்கா, கழுகு என சொல்லியபோது ரசிர்கள் விசிலடித்து கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனர்.)
காட்டுக்கு 2 பேரு வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு. இன்னொருத்தர் ஈட்டியோட போயி யானைக்கு குறி வச்சு ஒன்னும் இல்லாம வந்தாரு. இதுல யாரு வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான் வெற்றியாளர். எப்பவும் பெரிய விஷயங்களுககே கனவு காணுங்க. என்று கூறி குட்டி கதையை முடித்தார்.
முன்னதாக விஜய் பேசும்போது, மக்கள் திலகம்னா ஒருத்தர்தான், புரட்சி கலைஞர் விஜய்காந்த்னா ஒருத்தர்தான், உலகநாயகன்னா ஒருத்தர்தான், சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான், தலனா அது ஒருத்தர்தான்.
அப்படி தளபதி.
தளபதினா என்னனு உங்களுக்கு தெரியும்ல. உங்களுக்கு கீழ வேலை செய்ற தளபதி நான். மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன். நம்மளால எத ஜெய்க்க முடியுமோ அத ஜெய்க்கிறது வெற்றி இல்ல நண்பா. நம்மளால எது முடியாதோ அத ஜெய்க்கணும். ஒவ்வொருவருக்கும் ஆசைகள் இருக்கும் கனவுகள் இருக்கும்.
ஒரு பையன் அப்பா சட்டைய போட்டுக்குவான், வாட்ச் எடுத்து கட்டிக்குவான், சேர்ல உட்காந்துக்குவான். ஆனா சட்டை பெருசா இருக்கும் தொழ தொழனு இருக்கும். ஆனா அந்த பையனுக்கு அப்பா மாரி ஆகனும். அப்பா மாரி ஆகனும்னு கனவு அதுல என்ன தவறு. சினிமாவ சினிமாவா பாருங்க. என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து விஜய்யிடம் சில கேள்விகளுக்கு பதில் கேட்கப்பட்டது. அப்போது 2026 என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய், 2025 க்கு அப்றம் வர வருஷம் என்ன? உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடக்கப் போகுது. இன்னும் சீரியஸாவா… 2026 கப்பு முக்கியம் பிகிலு என்று பதில் அளித்தார்.
2026 இல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு விஜய் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. அதை மனதில் வைத்துதான் விஜய் 2026 இல் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறியதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன