யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 148ஆவது ஜனன தின நினைவேந்தல் நேற்று மாலை
யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் அலுவலகத்தில் யாழ். இந்தியத் துணைத்தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில் யாழ். இந்தியத் துணைத்தூதரக பதவிநிலை அதிகாரிகள்,அலுவலர்கள்,பலரும் கலந்துகொண்டு அமரரின் திருவுருவத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் என்பவர் அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.அவர் 1வது சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார்.
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.