” ஆண்டுக் கொரு மந்திரம் அருளிய நாயனார் ” திருமூலர் குருபூஜை

சாவல்கட்டில் திருமூல நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள்  நடத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 07
திருமூல நாயனார் குருபூஜை விழா சாவல்கட்டு ஆனைக்கோட்டை அந்திக்குழி அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் காளி அம்பாள் தேவஸ்தான பிரதான மண்டபத்தில்
29.10.2023 ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம்  ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் ஆன்மீக விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பா. தனபாலன்
கலத்து சிறப்பித்தார்.


சேக்கிழார் பெருமான் , திருமூல நாயனார் குருபூஜையைத் தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

அதனையடுத்து , ” ஆண்டுக் கொரு மந்திரம் அருளிய நாயனார் ” என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் பொன். சந்திரவேல் அவர்களின் சொற்பொழிவும் , சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அதனையடுந்து ஆன்மீக விருத்தினர் உரையும்
குருபூஜையை முன்னிட்டு மாணவர்களிடம் நடத்தப்பட்ட வினாடி வினாப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பாராட்டுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.  தொகுப்புரையினை இளம் சைவப்புலவர் க. கைலநாதன் ஆற்றினார்.

Recommended For You

About the Author: S.R.KARAN