இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது நினைவு தினம்

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது.

1987 ம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் பலரும் காயமடைந்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் 36 வது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் நினைவு கூரப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தசத்தியமூர்த்தி வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் சுட்டு உ படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நினைவேந்தலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு. உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏறப்பட்டது.

Recommended For You

About the Author: admin