ஜெயிலர் வசூல்தான் டாப்.. கலெக்‌ஷன் ரேஸில் பின் தங்கிய லியோ

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூலில் 30 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் விஜய் நடித்த லியி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படத்தை தமிழகத்தில் சுமார் 900 திற்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிட்டனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் முதல் நாள் வசூல் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு மற்றும் கேள்வி நிலவி வந்தது. இந்த நிலையில் வசூல் நிலவரம் குறித்து சினிமா வட்டாரங்கள் மற்றும் படக்குழு தரப்பில் விசாரித்தபோது இரண்டு விதமான தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. அதில் சினிமா துறையில் லியோ திரைப்படம் தமிழகத்தில் சுமார் 30 கோடி வசூலை தாண்டியுள்ளது.

அதேபோல் உலகம் முழுவதும் லியோ திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். அதேசமயம் உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படம் 88 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. அந்த வசூலை இந்த திரைப்படம் தாண்டவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

அதேசமயம் படக்குழு தரப்பில் விசாரித்தால் லியோ திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூலில் 35 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. இதன் மூலம் நடிகர் விஜய் தன்னுடைய பீஸ்ட் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை தமிழகத்தில் முறியடித்திருக்கிறார். பீஸ்ட் முதல் நாள் வசூல் 33 கோடி என தெரிவித்தனர். மேலும் லியோ திரைப்படம் உலக அளவில் 120 கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். ஆனால் திரைத்துறையினர் அந்த தகவலை மறுக்கின்றனர். லியோ திரைப்படம் 80 கோடி ரூபாய் மட்டுமே உலக அளவில் வசூல் செய்திருக்கிறது என சுட்டிக்காட்டுகின்றனர். இதன் மூலம் ஜெயிலரின் முதல் நாள் வசூலை உலக அளவில் லியோ திரைப்படம் முறியடிக்க வில்லை.

ஆனால் தமிழகத்தில் ஜெயிலர் முதல் நாள் வசூலில் 25 கோடி வசூல் செய்திருந்தது. அந்த சாதனையை மட்டும் லியோ திரைப்படம் முறியடித்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கழுகு கதை ஒன்றைக் கூறியிருந்தார். உயரத்தில் பறந்துகொண்டு இருக்கும் கழுகை காக்கா கொத்தும். கழுகு எதுவும் செய்யாமல் தன்னுடைய உயரத்தை அதிகருக்கும்.

அதன்பின் திரும்ப காக்கா வந்து கொத்துன். மீண்டும் தன்னுடைய உயரத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும், காக்காவும் முயற்சி செய்யும். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் கழுகின் உயரத்தை காக்காவால் தொட முடியாது என குறிப்பிட்டு இருந்தார். இந்த கதையை கொண்டு ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை உலக அளவில் லியோ திரைப்படம் தாண்டவில்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

 

 

Recommended For You

About the Author: admin