2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது வங்கதேசம்.
இந்தப் போட்டியில் மோசமாக ஆடி தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2015 உலகக்கோப்பை முதல் தொடர்ந்து 13வது தோல்வியை தழுவி இருக்கிறது.
தொடர்ந்து தோல்விகளை பெற்று வரும் அந்த அணி, 2023 உலகக்கோப்பை தொடரில் தங்கள் முதல் போட்டியிலும் தோல்வி அடைந்ததால் சோர்ந்து போனது. வங்கதேசம் அணி சற்று பலம் குறைந்த அணி என்பதால் ஆப்கானிஸ்தான் அணி எப்படியும் அந்த அணிக்கு ஈடு கொடுத்து ஆடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எந்த வகையிலும் ஈடு கொடுக்காமல் ஏமாற்றம் அளித்தது ஆப்கானிஸ்தான்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் – இப்ராகிம் சத்ரான் துவக்கம் அளித்தனர். சத்ரான் 22, அடுத்து வந்த ரஹ்மத் ஷா 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷாஹிதி 18, நஜிபுல்லா 5, முகமது நபி 6, ஓமர்சாய் 22, ரஷித் கான் 9, முஜீப் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
குர்பாஸ் மட்டுமே சிறப்பாக ஆடி 47 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி 37.3 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் வங்கதேச அணியின் பந்துவீச்சை பாராட்டியே ஆக வேண்டும். குறிப்பாக அனுபவம் மிகுந்த கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஒரு விஷயம் செய்தார்.
முதல் விக்கெட்டை எடுக்க வேண்டி முன்பே இரண்டு ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்திய பின் அவர் மற்ற பந்துவீச்சாளர்களை மட்டுமே நீண்ட நேரம் பயன்படுத்தினார். ஒரு விக்கெட் வீழ்ந்த உடன் ஆப்கானிஸ்தான் சரியத் துவங்கி விட்டது. இதுதான் நடக்கும் என சரியாக கணித்தார் ஷகிப்.
அடுத்து 157 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய வங்கதேசம் 4 விக்கெட்களை இழந்து 34.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதை அடுத்து வங்கதேசம் வெற்றியுடன் 2023 உலகக்கோப்பை தொடரை தொடங்கியது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி 2015 உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் பெற்ற வெற்றிக்கு பின் இதுவரை எந்த உலகக்கோப்பை போட்டியிலும் வெல்லவில்லை. ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் அந்த அணி தொடர்ந்து 13 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது