இன்றைய தினம் சூரியனை வழிபட்டு பொங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகும். ஆவணி மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியில் இருப்பார்.

அதாவது இந்த மாதம் முழுவதும் சூரியன் தன் சொந்த வீட்டில் இருப்பார். எனவே சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் சூரிய பகவானுக்கு சிறப்பு ஆலயங்கள் இருக்கின்றன. இந்த ஆலயங்களில் எல்லாம் ஆவணி மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.

பழங்காலத்தில் தமிழர்கள் ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். வீட்டின் முன்பு வெட்டவெளியில் புதுபானையில் பொங்கல் வைப்பார்கள். தை மாத பொங்கல் நிகழ்ச்சி போன்றே இந்த பொங்கலும் நடத்தப்படும்.

எனவே இந்த பொங்கலை ஆவணி ஞாயிறு பொங்கல் என்று அழைத்தனர். ஆவணி ஞாயிறு விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிறு கிராமம், கொளப்பாக்கம், திருக்கழுக்குன்றம், காஞ்சி கச்சயேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் சூரியனுக்கு சிறப்பான ஆலயமும், சன்னதிகளும் உள்ளன.

Recommended For You

About the Author: webeditor