இன்றைய கால திருமணத்தில் முன்பைவிட அதிகமாக விவாகரத்து செய்வது வாடிக்கையாக மாறிவிட்டது. அதுவும் காதலர்களாக இருந்து திருமணம் செய்து விவாகரத்து செய்யும் தம்பதிகள் தான் அதிகம் என புள்ளி விபரங்களும் கூறப்படுகின்றன.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சரியான புரிதல் இல்லாததே முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதெல்லாம், விட திருமணம் ஆனவர்கள் உறவை மீறி வேறு ஒரு நபருடன் தொடர்பை வைத்துக்கொள்வது பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது.
திருமணத்திற்கு மீறிய உறவை ஆண், பெண் ஏன் இருவரும் இதை தொடர்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
* முதலில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் காதலர்கள் அல்லது தம்பதிகள் இடைவெளி விடும் போது தங்களின் இணையர் மீதான ஆர்வத்தை இழக்கின்றனர்.
* அடுத்து இருவருக்கும் இடையே நீண்ட காலம் உறவு கொள்ளாமல் இருப்பதும் உறவு முறிவுக்கு இருக்கும் முக்கிய காரணமாக அமைகிறது.
* எப்போதும் வீட்டையும், குடும்பத்தையும் நிர்வகிப்பதில் ஈடுப்பட்டிருந்தால், தனிமையில் உள்ள மனைவி திருமணத்தை மீறிய உள்ள உறவி விருப்பம் காட்டலாம்.
* சின்ன விஷயங்களை மனைவியிடம் கேட்டு சண்டைபிடிக்காமல் அவரிடம் அன்பாக பழக வேண்டும்.
* மனைவியுடன் தினமும் மனதுவிட்டு அவர்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயங்களை கேட்டு அறியுங்கள். அவர்கள் மற்றவர்களுடன் பேச வாய்ப்பும் குறையும்.
* அதேப்போல் இளம் வயதில் திருமணத்தை தவிர்க்க வேண்டும். * விருப்பத்தோடு அவர்களின் திருமணத்தை பெற்றோர்கள் ஆதரிக்க வேண்டும்.
* குழந்தைகளுடனும் மனைவியுடனும் அன்பாக இருக்கவேண்டும்.
* திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட காரணமே, ஆண்/பெண் இருவரும் மனதுவிட்டு அனைத்தையும் பேசிவிட வேண்டும்.
* என்னதான் கணவன் மனைவி இடையே பிரச்சினை வெடித்தாலும், தாம்பத்திய உறவை தவிர்க்காமல் இருந்தேலே பாதி பிரச்சினை முடிந்துவிடும்.