மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேக பெருச்சாந்தி குடமுழுக்கு!

மட்டக்களப்பு வரலாற்று சிறப்பு பெற்ற சித்தாண்டி – முறக்கொட்டான்சேனை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய புனவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்ட பக்ஷ மகா கும்பாபிஷேக பெருச்சாந்தி குடமுழுக்கு நேற்றைய தினம் மிகவும் சிறப்பான முறையில் அந்தணர்களின் வேத பாராயணம் முழங்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் ஸ்ரீ மகா பெரிய தம்பிரான் பெருமானுக்கு குடமுழுக்குள் நடைபெற்றது.

சித்தாண்டி – முறக்கொட்டான்சேனை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக கிரிகைகள் சென்ற வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியதுடன் அதன் பின்னர் எண்ணெய்க்காப்பு சாத்துதல் நடைபெற்று இன்றைய தினம் மகா கும்பாபிஷேக குடமுழுக்கு நடைபெற்றது.

மகா கும்பாபிஷேக பிரதமகுரு ஸ்ரீ சிதம்பரலட்சுமி திவாகரக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

கும்பாவிசேகத்தை முன்னிட்டு ஆலயத்தில் விநாயகர் வழிபாடு, யாக பூஜை, மகாபூர்ணாகுதி, தீவாராதனை, உபசார கோமம், வேத தோத்திர திருமுறை பாராயணம் உள்ளிட்டவை நடைபெற்று சுப வேளையில் ஸ்ரீ மகா பெரியதம்பிக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக பெரு விழாவின் இறுதியில் கும்பாபிஷேகப் பெருவிழா பெரும் சாந்தி விழாவிற்கு வருகை தந்த சிவாச்சாரியார்கள் ஆலய கட்டிட வளர்ச்சிக்கு நல்ல உதவி செய்த சமூகப் பணியாளர்களுக்கும் ஆலய நிர்வாகம் சார்பாக மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தியின் நினைவாகவும் கௌரவிப்பு மடல்களும் வழங்கி வைக்கப்பட்டது.

கும்பாபிஷேகப் பெருவிழாவினைத் தொடர்ந்து மண்டல அபிஷேக பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற்று எதிர்வரும் 15 ஆம் தேதி 1008 சங்காபிசேகம் மற்றும் பாட்குட பவனியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: admin