யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஊசியின் மூலம் மருந்தினை ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமி தனது க்லையை இழந்த சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அவ்வேளை விடுதியில் கடமையில் இருந்த தாதியர்களிடம் சிறுமியின் நோய் நிலைமை தொடர்பில் தாயார் கூறியபோது, ‘ஊசி ஏற்றப்பட்டால் இப்படித்தான் வலி இருக்கும்’ என தாதியர்கள் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்ததாக பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனையடுத்து, சிறுமியின் கை நரம்பு பாதிக்கப்பட்டதை உணர்ந்த வைத்தியர்கள் அதனை அகற்ற வேண்டும் என தெரிவித்து , கடந்த சனிக்கிழமை (02) காலை சத்திர சிகிச்சை மூலம் சிறுமியின் மணிக்கட்டுடனான கையின் பகுதி அகற்றப்பட்டது.

அதேசமயம் சிறுமி அனுமதிக்கப்பட்ட விடுதிக்கு பொறுப்புடைய வைத்தியர் சம்பவ தினத்தன்று கடமையில் இருந்தாரா என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழும்புகின்றது.

பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன்
அத்துடன் விடுதியில் கடமையாற்றிய தாதியர்களின் அலட்சியப்போக்கும் சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி கூறுகையில், சிறுமிக்கு நடந்த சம்பவம் மனவேதனை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை நியமித்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சுக்கும் இவ்விடயம் தொடர்பாக அறிவித்துள்ளேன் என்றுள்ளார்.

குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பாரபட்சமின்றி எடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor