யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் வீதியில் விழுந்து மரணமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் (24.08.2023) வியாழக்கிழமை காலை 4.30 மணிக்கு குப்பிளான் தெற்கு பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை செய்துவிட்டு பிற்பகல் 1.00மணியளவில் வீட்டுக்கு வரும் வழியில் , வீதியில் விழுந்து உயிரிழந்தார்.
அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாரடைப்பு காரணமாகவே அவர் இறந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
யாழ்-ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் நாகேஷ்வரன் (வயது 37) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தகவலறியப்பட்டுள்ளது.

