வெல்லம் பொதுவாக அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இனிப்புப் பொருட்களை தயாரிப்பதில் வெல்லத்திற்குப் பதிலாக சர்க்கரை பயன்பாடே அதிக அளவில் உள்ளது.
அதிரசம் போன்ற சில இனிப்பு வகைகளைத் தவிர பெரும்பாலும் சர்க்கரையே பயன்படுத்தப்படுகிறது.
வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும். வெல்லம் சாப்பிடுவதால் பல விதமான நோய்களை தவிர்க்கலாம்.
கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்துள்ளது.
வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து அருந்துவது அதிகாலையில் உடனடி ஆற்றலை அதிகரிக்கும். இது சிறந்த மருத்துவ நன்மைகளை வழங்குகிறது மற்றும் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்
வெல்லம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் எடை கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை எடையை அதிகரிக்கச் செய்யும் அதே வேளையில் வெல்லத்தை உட்கொள்வதன் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வெல்லம் சாப்பிடுவது பெரிதும் நன்மை பயக்கும். வெல்லத்தில் உள்ள சத்துக்கள் நரம்புகளை ஆரோக்கியமாக வைக்க வேலை செய்கிறது.
இதன் காரணமாக இரத்தம் ஓட்டம் சீராகிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
இரத்த சோகையை போக்கும்
வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதைப் பயன்படுத்துவதால் உடலில் ரத்தம் சோகை ஏற்படாது.
இரத்த சோகை போன்ற நோய் உள்ளவர்கள் வெல்லம் சாப்பிடுவது நன்மை பயக்கும். பலவீனமான உடலை வலிமையாக்கும்.