வாகன புகை மற்றும் காற்று மாசுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
வாகன புகை காற்றில் அதிகம் கலப்பதால் வளிமண்டலத்தில் புகை மூட்டம் உருவாகத் தொடங்கியுள்ளது.
இதனால் வரும் மாதங்களில் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான பிற நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடினமாக இருக்கும்.
நுரையீரல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம்.
எளிதாக சுவாசிக்கக்கூடிய காற்றுப்பாதைகளை உருவாக்க விரும்பினால் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய சில சத்தான உணவுப் பொருட்கள் உள்ளன.
ஆப்பிள்கள்
நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் காற்றுப்பாதைகளின் வீக்கத்தைக் குறைக்கும் கூறுகளால் நிரம்பிய ஆப்பிள்கள் உணவாக இருக்க வேண்டும்.
அவை ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறளில் இருந்து விடுபட உதவுகின்றன.
புற்றுநோய்கள், இருதய நோய், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தையும் ஆப்பிள் குறைக்கிறது.
காபி
ஒரு லேசான மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்சனைகளில் இருந்து காபி நம்மை காக்கிறது. மூச்சுக்குழாய் மற்றும் மூச்சுக்குழாய்களை விரிவுபடுத்தும் ஒரு பொருளாக காபி உள்ளது.
இதனால் அதிக காற்று நுரையீரலை அடையும். ஒரு கப் காபி சுவாசத்தில் அதிசயங்களைச் செய்யும்.
இது நீண்ட கால விளைவைக் கொண்டிருக்கவில்லை என்றாலும் அது ஓரளவு நிவாரணம் அளிக்கும்.
பச்சை தேயிலை தேநீர்
வீக்கத்தைக் குறைக்க உதவும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு கப் க்ரீன் டீ தொண்டையை ஆற்றவும், சளியை வெளியேற்றி நுரையீரலைப் பாதுகாக்கவும் சிறந்தது.
எனவே க்ரீன் டீ எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கி கொள்வதன் மூலம் நுரையீரலை பாதுகாக்கலாம்.
பூண்டு
பூண்டு ஒரு அழற்சி எதிர்ப்பு காய்கறி, இது சுவாச அமைப்புக்கு சிறந்தது.
கேன்சர் எபிடெமியாலஜி, பயோமார்க்ஸ் & ப்ரிவென்ஷன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி பச்சையாக பூண்டு சாப்பிடுபவர்களுக்கு நுரையீரலில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என தெரியவந்துள்ளது.