உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் ஒரு பானம் என்றால் தேநீர்தான். பிளாக் டீ, மசாலா டீ முதல் ஹெர்பல் டீ, க்ரீன் டீ வரை பலவிதமான டீ வகைகள் உண்டு.
இப்போது ஆரோக்கியத்திற்காக பலரும் எலுமிச்சை தேநீரை பருகுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது.
பலரும் எடை இழப்புக்காக இதை பருக விரும்புகிறார்கள். ஒரு கப் லெமன் டீ நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதலாம் ஆனால் அது நம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பது பலரும் அறியாதது.
செரிமான பிரச்சினைகளை அதிகமாக்கும்
தேநீரில் எலுமிச்சை சாறு சேர்ப்பது அதன் அமில அளவை அதிகரிக்கிறது. இது உடலின் செரிமான செயல்முறையை மெதுவாக்கும்.
இது நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ், வீக்கம் மற்றும் மலச்சிக்கலைத் தூண்டும்.
நீரிழப்பு ஏற்படலாம்
உடலில் அமிலத்தின் அதிகரித்த அளவு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது மட்டுமல்லாமல் திரவ இழப்பையும் ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக, உடலின் நீர்மட்டத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
இதனால் லெமன் டீயை குடித்த பிறகு தலைவலி மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுவது சகஜம்.
பல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்
எலுமிச்சையில் உள்ள அமிலத்தின் அளவு பற்களின் பற்சிப்பிக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
தேயிலை மற்றும் எலுமிச்சையை இணைப்பதன் மூலம் அமிலத்தன்மை அதிகரிக்கும் போது அரிப்பு செயல்முறை துரிதப்படுத்தப்பட்டு பல் இழப்புக்கு வழிவகுக்கும்.
லெமன் டீயைக் குடித்த பிறகு கடுமையான வலி மற்றும் உணர்திறனை அனுபவிக்கலாம்.
எலும்புகளை பலவீனமாக்கும்
எலுமிச்சை சிறுநீர் மூலம் கால்சியத்தை வெளியேற்றுவதாக அறியப்படுகிறது.
இது தேநீரில் சேர்க்கப்படும் போது அது தேநீரில் உள்ள அலுமினியத்தை உறிஞ்சுவதற்கு உடலைத் தூண்டுகிறது.
இதனை உடலால் சாதாரணமாக உறிஞ்ச முடியாது. இந்த காரணிகள் நம் உடலில் அமில அளவை அதிகரிக்கலாம்.
இது நேரடியாக எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கிறது.