யாழ்ப்பாணம் – சுன்னாகம் மீன் சந்தையில் பழுதடைந்த மற்றும் பதப்படுத்துவதற்கான மருந்து (போமலீன்) கலக்கப்பட்ட மீன்கள் கணிசமான அளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மீன்களின் விலை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் சுன்னாகம் மீன் சந்தையில் மீன் கொள்வனவில் போமலீன் கலக்கப்பட்ட மீனை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மீன் சுத்தப்படுத்தும் நீரின் மணம் மற்றும் தன்மை போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டபோது மீனை மீண்டும் சுன்னாகம் மீன் சந்தைக்கு கொண்டு சென்று குறித்த வியாபாரியை அணுகி விபரங்களை எடுத்து சொல்லியபோது வியாபாரி தான் தரமான மீன்களை விற்பனை செய்வதாகவும் மீனின் குடல் தன்மை மற்றும் அதை அகற்றும் போது மீனில் அதன் தன்மை காணப்பட்டு அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் சமைத்து பாருங்கள் நல்ல மீன்தான் எனக் கூறினார்.
வீட்டில் சமைத்த போது மீன் மருந்து கலக்கப்பட்டிருப்பது குழம்பின் கெமிக்கல் மணம், மீனில் பூவின் தன்மை என்பவற்றால் நிரூபணமாகியது.
இவ்வாறான மீன்களால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் உடலியல் பிரச்சனைகள் கொள்வனவாளர்களுக்கு ஏற்படுகின்றன.
இவ் விடயம் தொடர்பாக குறித்த பிரதேசத்திற்குரிய சுகாதார பரிசோதகர், திணைக்கள உத்தியோகத்தர்கள் பொறுப்புவாய்ந்த முறையில் எம்சார் பிரச்சனையை கவனத்திலெடுத்து அணுகியமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தகவலை முகநூலில் யாழில் வாசிக்கும் கிருஷ்ணமூர்த்தி கிகிதரன் என்பவரால் பதிவிடப்பட்டுள்ளது.