யாழ்ப்பாணத்திலுள்ள அம்மன் கோயிலொன்றின் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்த 5 பூசகர்களின் ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதான பூசகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
1 மில்லியன் ரூபா பெறுமதி
முறைப்பாட்டின் பிரகாரம் திருடப்பட்ட கைத்தொலைபேசிகளின் பெறுமதி 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என கூறப்படுகின்றது.
ஜூலை 8 ஆம் திகதி கோயிலில் நடைபெற்ற பூஜையின் பின்னர், பூசகர்கள் நள்ளிரவில் கோயில் மண்டபத்தில் தூங்கியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
அதன்பின்னர் அதிகாலை 4.15 மணியளவில் அவர்கள் கண்விழித்தபோது, அவர்களது தொலைபேசிகள் காணாமல் போனது தெரியவந்த நிலையில் பூசகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
5 பூசகர்களும் கையடக்கத் தொலைபேசிகளை தரையில் வைத்துவிட்ட உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில் கைத்தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை யாழ் மாவட்டத்தில் அண்மைய காலங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்ற நிலையில் இது தொடர்பில் பொலிஸார் விரந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.