யாழில் புத்தாக்கத்தையும் புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும் போட்டி

YGC என்றால் என்ன?

Yarl Geek Challenge ஆனது வடக்கு மாகாணத்தில் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு இடையே புத்தாக்கத்தையும், புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும் ஒரு வருடாந்த போட்டியாகும்.

 

இப் போட்டியை கடந்த 12 வருடங்களாக Yarl IT Hub, வடக்கு மாகாண கல்வி திணைக்களத்துடன் இணைந்து நடத்தி வருகிறது.

 

YGC Season 12 – நடைபெற்ற விதம்

போட்டி ஆரம்பித்த பின் 13 கல்வி வலயங்களிலும் YITயின் தன்னார்வலர்களால் புதிய தொழிநுட்பங்கள் மற்றும் கருவிகள் பற்றி Workshops மற்றும் Seminars மேற்கொள்ளப்பட்டது.

 

அதன் பின்னர் மாணவர்கள் இப் போட்டிக்கு குழுவாகவோ அல்லது தனியாகவோ விண்ணப்பித்தனர். இவ்வருடம் 13 கல்வி வலயங்களில் இருந்து மொத்தமாக 728 மாணவர்கள் போட்டிக்கு விண்ணப்பித்தார்கள்.

 

விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த பிரிவில் indepth seminarகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தேவைப்பட்ட மாணவர்களுக்கு mentoringஉம் வழங்கப்பட்டது.

 

ஜூன் மாதம் 16, 17ஆம் திகதிகளில் வலய மட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் 374 அணிகள் பங்கு பற்றின. இதில் இருந்து 87 அணிகள் தெரிவு செய்யப்பட்டு ஜூலை 1,2 இறுதி போட்டி நடைபெறும்.

 

சனிக்கிழமை (1st july 2023) காலை 10 மணி தொடக்கம் தந்தை செல்வா கலையரங்குக்கு வருகை தருவதன் மூலம் மாணவர்கள் கண்டுபிடிப்புகள், என்பவற்றை பார்வையிட முடியும்.

 

அதேபோல ஞாயிற்றுக்கிழமை (2nd july 2023) மாலை 01 மணியில் இருந்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெறும். இதில் வெற்றி பெற்ற அணிகள், பாடசாலைகளுக்கு பரிசில்கள் வழங்கப்படும்.

 

Recommended For You

About the Author: S.R.KARAN