நான்தான் விஷ்ணு அவதாரம் என இரண்டு மனைவிகளுடன் மக்களை ஏமாற்றிவந்த தமிழகத்தை சேர்ந்த போலி சாமியார் ஒருவர் தெலுங்கானாவில் சிக்கியுள்ளார்.
திருவண்ணமலை, செஞ்சியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருக்கு 2 மனைவிகளும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் 1 வருடத்திற்கு முன் தெலங்கானா, சுகுரு கிராமத்திற்கு சென்று கோயிலில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார்.
மக்களை காக்க வந்த மகாவிஷ்ணு
தமிழகத்தில் நான்தான் கடவுள்.. நான்தான் விஷ்ணுவின் மறு அவதாரம் என வலம் வந்த சந்தோஷின் எண்ணம் வேலைக்காகததால் தனது இருப்பிடத்தை தெலங்கானாவிற்கு மாற்றிக் கொண்டார்.
அங்கும், மக்களை காக்க வந்த மகாவிஷ்ணு.. மனித உருவில் வந்த கடவுள்.. தனது மனைவிகளே ஸ்ரீதேவி, பூதேவி என தன்னிடம் வரும் மக்களிடம் பீலா விட்டதுடன், எதிர்காலத்தில் ஐந்து தலை பாம்பு தனது படுக்கையாக இருக்கும் எனவும் போச்சாமியார் கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் , ஐந்து தலைகளைக் கொண்ட பாம்பு போன்று கட்டில் அமைத்து அதில் படுத்திருக்க இரு மனைவிகளும் போலிச்சாமியாரின் கால்களை அழுத்திவிடும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.
அங்குள்ள் கிராமத் தலைவர் தனது விவசாய நிலத்தில் உள்ள ஒரு வீட்டை போலி சாமிக்கு தானமாக கொடுத்த நிலையில், போசாமியாரை சந்திக்க ஏராளமான பக்தர்கள் வரிசைகட்டி நின்றனர்.
இதனை அறிந்த போலீஸார் சந்தோஷ் சுவாமியை அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்ப்டுகின்றது.