பொலிஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு!

தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் நடைபெறும் வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த உத்தரவினை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அங்கீகரிக்கப்படாத அல்லது உரிமம் பெறாத துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை கையளிக்க ஜூலை 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor