முட்டையால் பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பிரித்தானியாவில் மைக்ரோவேவில் முட்டையை வேகவைத்து எடுத்தபோது வெடித்ததில் பெண்ணின் முகம் ஒருபக்கமாக சிதைந்தது.

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரின் போல்டனில் வசிப்பவர் ஷாஃபியா பஷிர். 37 வயதான இவர் இணையத்தில் பிரபலமான நுட்பத்தை பயன்படுத்தி முட்டையை வேக வைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் Microwaved Poached Egg என்னும் இந்த முறையில், கண்ணாடி கிண்ணம் அல்லது குவளை ஒன்றில் பாதியளவு சாதாரண நீரை ஒற்றி, அதில் பச்சை முட்டையை ஊற்றி உப்பு சேர்த்து மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வேகவைத்து எடுத்து, அதனை வெட்டி சாப்பிடுவர்.

ஆனால், ஷாஃபியா இம்முறை முட்டையைச் சேர்ப்பதற்கு முன்பு முதலில் ஒரு குவளையில் சிறிது கொதிக்கும் நீரை ஊற்றியுள்ளார்.

அது சமைக்கும் வரை இரண்டு நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்துள்ளார். அதன் பின்னர் வெளியே எடுத்து குளிர்ந்த கரண்டியை முட்டையின் மீது வைத்தபோது, அது ஒரு நீரூற்று போல் வெடித்துள்ளது.
இதில் அவரது முகத்தின் வலது பக்கம் எரிந்தது. இதனால் ஷாஃபியா வலியால் துடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அவசர பிரிவுக்கு சென்ற ஷாஃபியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சம்பவம் நடந்து 12 மணிநேரத்திற்கு பிறகும் அதன் பாதிப்பு இருப்பதாக கூறினார்.

இந்நிலையில் அவரது காயங்கள் குணமாகிவிட்டாலும், பிரபலமான இந்த முறையில் உணவை சமைக்க முயற்சிப்பது பற்றி ஒன்றுக்கு இருமுறை யோசிக்கும்படி ஷாஃபியா எச்சரித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கூறுகையில், ‘நான் குவளையில் பாதி தண்ணீர் நிரப்பி, உப்பு, முட்டையை உள்ளே வைத்து, ஒரு நிமிடம் மைக்ரோவேவ் செய்தேன். அது சமைக்கப்படவில்லை, எனவே நான் அதை மற்றொரு நிமிடம் வைத்தேன். அது நடந்த (வெடித்த பின்) பிறகு, நான் என் முகத்தை குழாயின் கீழ் 20 நிமிடங்கள் வைத்தேன்.

ஆனால் எரிப்பு 12 மணிநேரம் நீடித்தது. அது மட்டும் நிற்கவில்லை. எனது முகம் இப்போது குணமாகிவிட்டது, அதிர்ஷ்டவசமாக எந்த தழும்புகளும் இல்லை’ என தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: webeditor