பிறப்புச் சான்றிதழில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

நாட்டில் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்
நவீன தேவைகளை கருத்திற் கொண்டு அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக இதன்போது தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரஜைகளுக்கும் பாடசாலைகளின் சேர்க்கையின் போது, தேசிய அடையாள அட்டையைப் பெற்றுகொள்ளும் போது, திருமணத்தைப் பதிவு செய்தல் மற்றும் கடவுச்சீட்டைப் பெறும் சந்தர்ப்பங்களில் பிறப்புச் சான்றிதழ் தேவையென்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறப்புச் சான்றிதழ்கள்
அத்துடன், தனிநபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றாலும், சில சந்தர்ப்பங்களில் பிறப்புச் சான்றிதழ்கள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஒவ்வொரு பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை வழங்குவதன் மூலம், காகிதப் பணிகளுக்குச் செல்லாமல், பல பணிகளை வசதியாக முடிக்க முடியும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor