வடக்கு கிழக்கில் மாடுகளிடையே பரவும் புதிய தோல் நோய்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் அண்மையில் மாடுகளுக்கிடையே Lumpy skin disease எனப்படும் தோல் கழலை நோய் பரவியது.

இந்த நிலையில், தற்போது குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் Lumpy skin disease அறிகுறிகளுடன் காணப்படுவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தின் ஹொரம்பாவ, நாரம்மல, கெக்குணகொல்ல, மெட்டியாவ, மிதியால, பண்டாரகொஸ்வத்த, பரகஹகொட்டுவ உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளிடையே தோல் கழலை நோய் பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நோய்த் தாக்கத்தினால் குறித்த பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor