தமிழ்ப் புத்தரிடம் தையிட்டியா? ராகுல தேரருக்கு சிவசேனை பதிலடி

ஊடகத்தாருக்கு

வைகாசி 12, வெள்ளி (26.05.2023)

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்
சிவ சேனை

தமிழ்ப் புத்தரிடம் தையிட்டியா?

பொகவந்தலாவை இராகுல தேரர் சொல்கிறார். புத்தரின் கருத்துரை தெரியாதவர் சொல்கிறார்.

இரட்டை மணிமாலையே தம்மபதத்தின் தொடக்க அத்தியாயம். புத்தர் சொன்னதாக ஆனந்தர் எழுதிய வரிகள்.

அதையே படிக்காதவர் இராகுல தேரர். துவராடை அணிந்ததால் தலையை மழித்ததால் பிச்சை எடுப்பதால் பிக்குவானவர்.

தமிழ்ப் புத்தரிடம் தையிட்டியைக் கையளிப்பதாகச் சொல்கிறார்.

இரட்டைமணி மாலையின் ஒன்பதாவது சூத்திரம் சொல்வதென்ன? எவன் ஒருவன் உண்மையை மறுக்கிறானோ அவன் துவராடைக்கு அருகதை அற்றவன்.

தையிட்டியில் அடாத்தாக அபகரித்த நிலம். அதில் புத்த விகாரை. நில உரிமையாளரின் எதிர்ப்பை மீறிக் கட்டிய புத்த விகாரை.

இஃது உண்மை.
யாழ்ப்பாண மாவட்டம்
வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப் பிரிவு
யா/250 தையிட்டி தெற்கு நிலாதாரிப் பிரிவு
கலைவாணி வீதி
முடித்துக் கலட்டி
8 ஏக்கர் காணி
தனியார் காணி
உறுதிக் காணி
1. உறுதி எண்: 3431, 21 + 9 = 30 பரப்பு – உரிமையாளர் பெயர்???
2. உறுதி எண்: 4383, 14 பரப்பு
3. உறுதி எண்: 4118, 9 பரப்பு – உரிமையாளர் கந்தவனம் தம்பையா
4. உறுதி எண்: 2881, 8 பரப்பு – உரிமையாளர் ஆறுமுகம் பத்மநாதன் (1972 பதிவு)
5. உறுதி எண்: 396, ? பரப்பு – உரிமையாளர் அப்புத்துரை சிவகுமார் (1989.10.08 பதிவு)
6. உறுதி எண்: 396, ? பரப்பு – உரிமையாளர் அப்புத்துரை சுரேஸ்குமார் (1989-10- 08 பதிவு)
7. சீனியர் சிவசம்பு,
8. பொன்னம்பலம் பூரணம்,
9. நாகரத்தினம் கங்காதரன்
10. பெயர் தெரியாது
11. பெயர் தெரியாது
12. பெயர் தெரியாது

ஆகிய 12 உரிமையாளரின் 8 ஏக்கர் நிலம்.

சிந்தோட்டை நந்தர தேரர் தலைமையில் எட்டு ஏக்கர் நிலத்தையும் அடாத்தாகக் கைப்பற்றி (இன்னும் சொல்லப்போனால் களவெடுத்து) விகாரையைக் கட்டுகிறார்.

அடாத்தாகக் கைப்பற்றிய அல்லது களவெடுத்த நிலத்தில், பிரதேச சபையின் உரிமம் எதுவும் இன்றிக் கட்டிய விகாரையை, இதுவரை உருவாகாத, இல்லாத தமிழ்ப் புத்த அமைப்பிடம் கையளிப்பதாகக் கூறுகின்ற பொகவந்தலாவை இராகுல தேரர் புனைதுகில் அணிகின்ற புத்தரா? திருஞானசம்பந்தர் சொல்கின்ற எத்தரா?

யாரோ ஒருவருடைய காணி. அடாத்தாகக் கைப்பற்றினார்கள். அங்கே புத்த விகாரையைக் கட்டினார்கள். அந்த விகாரையை இடித்து விடுங்கள். நிலத்தை உரிமையாளரிடம் மீளக் கொடுத்து விடுங்கள்.

இவ்வாறு கூறுபவரே தேரர். தெரிந்தவர், தெளிந்தவர், அறிந்தவர், தம்ம பதத்தைப் படித்தவர், தம்மபதம் வழி நடப்பவர்.

தையிட்டியைத் தமிழ்ப் புத்தரிடம் கையளிப்போம் எனக் கூறுகின்ற இராகுலர் தம்மபதத்தின் முதலாவது அத்தியாயம் இரட்டை மணி மாலையின் ஒன்பதாவது சூத்திரத்துக்கு அமைய துவராடையைக் களைவாராக.

முன்பு அணிந்திருந்த பூணூலையும் களைவாராக.

Recommended For You

About the Author: S.R.KARAN