நாற்ப்பது வருடங்களின் பின்னர் யாழில் இருந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சென்ற கொடி!

வரலாற்று பிரசித்தி பெற்ற மன்னார் -திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை மே 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து 40 வருடங்களுக்கு பின்னர் கொடிச்சீலை திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டது.

விசேட பூஜை வழிபாடுகள்
கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டு திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு கொடிச்சீலை வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. அதேவேளை கடந்த 1982ம் ஆண்டிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்தே திருக்கேதீஸ்வரத்திற்கு கொடிச்சீலை வழங்கப்பட்டநிலையில் யுத்த காலத்தில் அந்த நடைமுறை கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் 40 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கி வைக்கப்பட்டது.

அதேவேளை அண்மையில் கொடிச்சீலை உபயகரார்களுக்கான களாஞ்சி வழஙகும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor