ஐந்து மாகாண ஆளுநர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ இதுவரை எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என பல்வேறு மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஐனாதிபதியோ ஐனாதிபதி செயலகமோ பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக அறிவிக்கவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, Jeevan Thiagarajah தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், ​​Anuradha Yahampath ஊடகங்களில் வெளியான செய்திகளில் இருந்து தாம் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டதாகத் தான் அறிந்ததாகவும், இருப்பினும், இதுவரை தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

அவர் ராஜினாமா செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் கூறினார்.

இது தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் கருத்து தெரிவிக்கையில்,

[
ராஜினாமா செய்யுமாறு தனக்கு அறிவிக்கப்படாததால் ஆளுநர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என்றார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இலங்கை திரும்பியதும், ஜனாதிபதி எழுத்து மூலம் தமக்கு அறிவித்தால் மாத்திரமே பதவி விலகத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, தனது பதவியை இராஜினாமா செய்வதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாததால், தொடர்ந்தும் ஆளுநராகப் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு அண்மையில் அறிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஒருவர் பதவி விலகும் போது ஆளுநர்கள் இராஜினாமா செய்வது மரபு எனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று பல மாதங்கள் கடந்துள்ள போதிலும் ஆளுநர்கள் பதவி விலகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில ஆளுநர்களை நீக்குமாறு பிராந்திய அரசியல்வாதிகள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor