பிரதேசத்தில் மாணவியொருவர் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் நேற்று முன் தினம் (08) பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார்.
சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நேற்றையதினம் கதாகியிருந்த நிலையில், சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தின் சந்தேக நபர் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. களுத்துறை இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய தனுஷ்க கயான் சஹபந்து என்பவரே மாணவியுடன் ஹோட்டலில் தங்கியிருந்தவர் ஆவார்.
டிக்டொக் பிரபலம்
சந்தேக நபரான தனுஷ்க கயான் சஹபந்து டிக்டொக் சமூகவலைத்தளமூடாக பிரபலமானவராவார். இந்நிலையில் டிக்டொக் சமூக வலைத்தளமூடாக பல மாணவிகள் சந்தேக நபருக்கு அறிமுகமாகியுள்ளனர்.
29 வயதுடைய தனுஷ்க கயான் சஹபந்து மூன்று திருமண முடித்தவர் என கூறப்படும் நிலையில் , இவரது வலையில் விழுந்த பல மாணவிகள் அவருடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அதில் இஸ்லாமிய மாணவி ஒருவரும் உள்ளார். இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவது எத்தனை ஆபத்தானது என்பதை கண்டுகொள்வதில்லை.
சமூகவலைத்தளகளின் அறிமுகமில்லாத நபர்களுடன் இளம் பிராயத்தினர் தொடர்புகளை பேணி வருவதால் அவர்களது வாழ்வும் திசைமாறி செல்வதுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகின்றது.
குறித்த நபருடன் நெருக்கமாக நின்று பல இளம் பெண்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அதேவேளை கழுத்துறையில் உயிரிழந்த மாணவி எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவர் என்றும், ஆண் நண்பர்களுடன் தனது மகள் பழகுவதில்லை எனவும் உயிரிழந்த மாணவியின் தாயார் கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில் சந்தேகநபருடன் பல மாணவிகள் நெருக்கமாக எடுத்துகொண்ட புகைபடங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.