கிளி/ கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பெண் அதிபர், மாணவி ஒருவரை தான அடித்ததை நியாயப்படுத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பெண் அதிபர் பாடசாலை மாணவி ஒருவரி தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை , அதிபரிடம் சம்பவம் தொடர்பில் வினாவியுள்ளார்.
மரியாதைக் குறைவாக பேசிய பெண் அதிபர்
இதன்போது மாணவியின் தந்தையை மரியாதைக் குறைவாக பேசிய பெண் அதிபர் தான் செய்ததை நியாப்படுத்தி வாதாடுகின்ற காணொளி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பெற்றோரிடம் மரியாதையாக பேச தெரியத ஒரு அதிபர் , மாணவர்களிடம் எப்படி நடதுகொள்வார் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அடித்தால் பிள்ளைகள் திருந்தி விடுவார்களா?
இப்படிப்பட்டவர்கள் அதிபராக இருந்தால் மாணவர்களின் எதிர்கால நிலை கவலைக்கிடமாகும் என சுட்டிக்காட்டிய அவர்கள், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்
மேலும் அடித்தால் மட்டும் பிள்ளைகள் திருந்தி விடுவார்களா? அதிபர் என்ற நிலையில் இருந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றே தெரியவில்லை.
தண்டனைகள் மூலமாக மாணவர்களிடம் மாற்றம் ஏற்படும் என்றால் மட்டுமே குறித்த தண்டனைகள் வழங்க வேண்டும். இlலையெனில் அந்த தண்டனையை வழங்குவதில் பயன் இல்லை எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.