ஆன்லைனில் கையடக்க தொலைபேசி ஓடர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இரத்தினபுரியில் கொரியர் சேவை மூலம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தொலைபேசி பார்சலை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர் அதனை திறந்து பார்த்தபோது தண்ணீர் போத்தல் மற்றும் வைக்கோல் இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் மூலம் கையடக்கத் தொலைபேசிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசியின் விலை 60 ஆயிரம் ரூபா என்று விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரருக்கு கையடக்க தொலைபேசி பார்சல் விநியோகம் செய்யப்பட்டதாக குறுந்தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் விண்ணப்பித்தவரின் பெயருக்கு வந்த பார்சலை வழங்கிவிட்டு 61,000 ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளார்.

அவரும் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று ரசீது கொடுத்துவிட்டு சென்றார். கையடக்கத் தொலைபேசி அடங்கிய பார்சலை திறந்து பார்த்தபோது பார்சலுக்குள் வைக்கோல் மற்றும் சிறிய தண்ணீர் பாட்டில் ஒன்றும் இருந்துள்ளது.

இதற்காக கிடைத்த ரசீது குறித்தும் கொரியர் நிலையத்திற்கு சொந்தமானது எனக்கூறி விசாரித்தபோது அது உண்மையல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor