வயதானாலும் இளமையாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் ஆசை தான். ஆனால், வயது ஏற ஏற முகத்திலும் மாற்றம் ஏற்படத் தொடங்கிவிடுகிறது.
இவ்வாறு முகத்தில் வயதான தோற்றம் வர பல காரணங்கள் உண்டு. இருப்பினும் வயது ஏறினாலும் நம்மை நீண்ட காலம் இளமையாக வைத்திருக்கும் சில விடயங்கள் காணப்படுகின்றன. அவை என்னவென்று பார்ப்போம்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த எடையை பராமரிப்பது மிகவும் முக்கியம். எனவே தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
சருமத்தில் வீக்கத்தை உண்டாக்கும் கெமிக்கல் தயாரிப்புக்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
மன அழுத்தமும் நம்மை வயதானவராக காட்டக்கூடியது. எனவே தியானம், யோகா என்பவற்றில் ஈடுபட வேண்டும்.
பழங்கள், காய்கறிகள் என அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
புகைப்பழக்கம் அல்லது மதுப்பழக்கம் இருந்தால் கட்டுப்படுத்தி விடவேண்டும்.
போதுமான தூக்கம் மிகவும் முக்கியம். சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்க்ரீன் என்பவற்றை பயன்படுத்த வேண்டும்.
சீரான இடைவெளியில் சருமத்தை மசாஜ் செய்துகொள்ள வேண்டும்.
விட்டமின் சி, ஹைலூரோனிக் ஆசிட், ரெட்டினோல் என்பவை அடங்கிய ஆன்டி ஏஜிங் தயாரிப்புக்களை பயன்படுத்த வேண்டும்.
சூடான நீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது சருமத்திலுள்ள எண்ணெயை அகற்றி, வறட்சி மற்றும் சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
ஈறுகள், பற்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.