ஆரம்ப காலங்களில் எண்ணெய் தேய்த்து குளித்தல் என்பது ஒரு சம்பிரதாயமாகவே பார்க்கப்பட்டது.
பெரும்பாலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்று கூறுப்படுகிறது.
தற்போது பரபரப்பான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு, மன அமைதி தேவையான ஒரு விடயமாக இருக்கின்றது. அப்படி பார்க்கும் பொழுது எண்ணெய் குளியல் சிறந்ததொரு தீர்வாக அமைகிறது.
நெல்லிக்காய், செம்பருத்தி, கரிசாலை ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெயை தலைக்கு தேய்க்கலாம். இது முடி வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல் இளநரையையும் தடுக்கிறது.
நல்லெண்ணெய்யுடன் சீரகம் சேர்த்து காய்ச்சி தேய்த்துக் குளிப்பதனால் மன அமைதியின்மை, அதிக உடல் சூடு, ரத்தக் கொதிப்பு என்பவற்றை தடுக்கிறது.
சுக்கு தைலத்தைத் தேய்த்து குளிப்பதன் மூலம் இருமல், சளி, சைனஸ் போன்ற நோய்களை இல்லாமல் செய்யலாம்.
அரக்கு தைலத்தை பயன்படுத்துவதன் மூலம் தொண்டை பிரச்சினை, ரத்தக் குறைவு என்பவற்றை தடுக்கலாம்.
உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
எண்ணெய் தேய்த்து குளிப்பது சரும அழகையும் மேம்படுத்தும்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று உடல் பலவீனமாக இருப்பதால் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அதுமமட்டுமில்லாமல் எண்ணெய் குளியல் போடும் அன்று எந்தவொரு கடினமான வேலையையும் செய்யாமல் இருப்பது நன்று.