பேத்தாழை பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகம் மற்றும் விபுலானந்தர் கலை இலக்கிய வாசகர் மன்றம் இணைந்து கவிஞர்.சுஜி பொற்செல்வியின் ‘பனி விழும் பொழுதுகள்’ – கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பேத்தாழை பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

சர்வதேச புத்தக தினத்தினை முன்னிட்டு பேத்தாழை பொது நூலகம் பொறுப்பாளர் ம.பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகம் ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசா, கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் ச.நவநீதன், மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவியாணையாளர் அலுவலகம் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப்.அ.ஹாரூன், ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் த.தர்மபாலன் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நூல் ஆசிரியர் கவிஞர்.சுஜி பொற்செல்வியின் தாயாரான திருமதி.சிவபதி முருகையாவினால் முதல் பிரதி கிழக்குப் பல்கலைக்கழகம் ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசாவிற்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், ஏனைய பிரதிகள் அதிதிகளுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

நூல் நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழகம் ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசா நிகழ்த்தினார்.

நூல் ஆசிரியர் கவிஞர்.சுஜி பொற்செல்வியின்
பிரணவா இசை நடனக் கலைக் கல்லூரி மாணவர்களின் நடனம் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: webeditor