யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கடந்த சனிக்கிழமை (22) படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் பூமணி ஆகியோரது சடலங்கள் உடல்கூற்று பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
உறவினர் இல்லத்தில் அஞ்சலி
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் பிரம்படி ஒழுங்கையிலுள்ள உறவினர் ஒருவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.நெடுந்தீவில் 5 பேர் படுகொலை செய்ய்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதான சந்தேகநபரை 48 மணிநேர பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்ப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த வீட்டில் கடந்த இரு தினங்கள் தங்கியிருந்த 51 வயதான நபர் கைது செய்யப்பட்டிருந்தார். யாழ் நெடுந்தீவு ஐவர் படுகொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.