இன்று உலக யானைகள் தினம்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யானைகளின் தாயகமாக விளங்கி வருவது இலங்கை என கூறப்பட்டு வருகின்றன.

தற்போது கடும் நெருக்கடியில் உள்ள யானை மனித மோதலுக்கான நிலையான தீர்வைக் காண அவசரத் தேவையின் காரணத்தினால் இந்த நாள் மிகவும் முக்கியமானது என கருதப்படுகின்றது.

கணக்கெடுப்புகளின்படி 5% யானைகள் என மதிப்பிட்டு இலங்கையில் மொத்த யானைகளின் எண்ணிக்கை 6,000 ஐ நெருங்குகிறது என கூறப்படுகிறது.

இருப்பினும் மனித யானை மோதல்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 யானைகள் இறக்கின்றன மற்றும் 100 க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் இழக்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரச்சினை உரிய முறையில் அடையாளம் காணப்படாததால் காட்டு யானைகள் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக காட்டு யானைகள் தொடர்பான நாட்டின் முன்னணி ஆய்வாளர்களில் ஒருவரான கலாநிதி “பிரிதிவிராஜ் பெர்னாண்டோ” தெரிவித்துள்ளார்.

சமூக அடிப்படையிலான மின்சார வேலி முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த நிலைமைக்கு ஓரளவு தீர்வை வழங்க முடியும் எனவும் கலாநிதி பிரிதிவிராஜ் பெர்னாண்டோ கூறுகிறார்.

Recommended For You

About the Author: webeditor