இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு தண்ணீர் அருந்துமாறு பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பாடசாலைக்கு செல்லும் குழந்தையின் வயதைப் பொறுத்து 4 முதல் 6 போத்தல் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் வெப்பநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுறுசுறுப்பான வாழ்வு
இதேவுளை, தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற சுறுசுறுப்பான வாழ்வு மிகவும் அவசியம் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர், சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் உடல் ரீதியாக சுறுசுறுப்பு மிகுந்த மாதமாக பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக மருத்துவ நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.