சுற்றுலா பயணிகள் வருகையால் இலங்கைக்கு கிடைத்துள்ள இலாபம்

சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கையின் வருமானம் பெப்ரவரி மாதத்தில் 170 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, பெப்ரவரி 2022 இல், சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கைக்கு 169 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன.

இந்த வருடத்தின் மூன்று மாதங்களிலும் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது.

மேலும் ஜனவரி 2023 இல் 102,545 வருகைகள் மற்றும் 2022 பெப்ரவரியில் 96,507 பதிவு செய்யப்பட்ட சுற்றுலா பயணிகளின் வருகையுடன் ஒப்பிடுகையில், பெப்ரவரி 2023 இல் 107,639 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, மார்ச் மாதத்தில் ஏற்கனவே 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor