இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஊடாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களை பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சமூக பாதுகாப்பு வலைப்பின்னல்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் அங்கீகாரம் குறித்து இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி குறித்த கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்ட காலத்தில் இலங்கையும் குறிப்பிடத்தக்க வெளி நிதி இடைவெளியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிதி இடைவெளியை புதிய வெளிநாட்டு நிதி மற்றும் வெளிநாட்டு கடன் சேவை நிவாரணம் மூலம் ஈடுசெய்ய வேண்டும்.

இலங்கையின் திருப்பிச் செலுத்தும் திறன் மேலும் சிதைவதைத் தவிர்ப்பதற்காக நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில் பணப்புழக்க நிவாரணத்தை இலக்காகக் கொண்ட உள்நாட்டு கடன் மேம்படுத்தல் நடவடிக்கைக்கான விருப்பங்களையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

அவை தமது கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாம் முன்னோக்கிச் செல்லும்போது எங்களின் அனைத்து கடன் வழங்குநர்களுடனும் வெளிப்படையான முறையில் நல்ல நம்பிக்கையுடன் ஈடுபாட்டைத் துரிதப்படுத்தவும் தீவிரப்படுத்தவும் நாம் கடமைப்பட்டுள்ளோம் அத்துடன் சர்வதேச நாணய நிதிய கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு மற்றும் ஒப்பீட்டுத் தன்மையுடன் ஒத்துப்போகும் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை அடைய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேறியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor