யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரு மாதத்தில் மாத்திரம் 700 பேருக்கு கண் சத்திர சிகிச்சை!

யாழ் போதனா வைத்தியசாலையில் வட மாகாணத்தில் இருக்கின்ற பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கிரமமான கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ALAKA FOUNDATION, Malaysia மற்றும் Assist RR / UK நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு கண்சத்திர சிகிச்சை நடைபெறுகின்றது.

இதேவேளை, இன்றையதினம் (30-03-2023) வவுனியாவை சேர்ந்த 49 பேர் அழைத்துவரப்பட்டு வைத்திய நிபுணர் Dr.M.மலரவன் மற்றும் போதனா வைத்தியசாலை கண் சத்திர சகிச்சை நிபுணர்கள் மற்றும் மன்னார் வைத்தியசாலை கண் சத்திர சிகிச்சை நிபுணர் உள்ளடங்களாக வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் உதவியாளர்கள் குழாம் வெற்றிகரமாக இந்த சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மேற்படி நிறுவனங்களின் உதவியோடு கண் சத்திர சிகிச்சை நிபுணர் Dr.M. மலரவன் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இதுதொடர்பான தகவலை முகநூலில் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor