ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது. இது இன்றைய ஆண், பெண் இருபாலாருக்கும் இருக்கும் பெரிய பிரச்சினையாகவே தான் இருக்கிறது.
தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது. அதேபோல தினமும் தலைக்கு குளித்தால் முடி கொட்டுமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துக் கொண்டே தான் இருக்கிறது.
பொதுவாக மனிதனுக்கு சுத்தம் என்பது மிகவும் முக்கியம் அந்த சுத்தத்தின் முக்கிய வேலையே தினமும் குளிப்பது தான். தினமும் தலைக்கு குளிப்பது உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
அது புத்துணர்ச்சியைக் கொடுப்பது மட்டுமல்ல உங்களின் ஒவ்வொரு நாளையும் உற்சாகத்துடன் ஆரம்பிக்க உதவும்.
இவ்வாறு குளிப்பது ஆண்களுக்கு மிகவும் இலகுவாக இருந்தாலும், பெண்களுக்கு தினமும் குளிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். தினமும் தலைக்கு குளிப்பதால், தலைமுடியில் காணப்படும் இயற்கையான எண்ணெய் பசை குறையும்.
இதன் காரணமாக கூந்தலின் இயற்கை அழகு பாதிப்பதோடு, கூந்தலின் பளபளப்பும் சீர்குலையும். எனவே, உங்கள் கூந்தல் கலையிழந்து வறட்சியாக காணப்படும்.
அந்தவகையில் இன்றைய வீடியோ பதிவில், நீங்கள் குளிக்கும் போது முடியை எப்படி அலசுவது, எப்படி ஷாம்பு, கண்டிஷனர் போடுவது என்பது தொடர்பில் கீழுள்ள காணொளி மூலம் தெளிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்.