அறிவாளிகளை கூட முட்டாளாக காட்டும் 6 பழக்கங்கள்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
நீங்கள் உங்களுக்கு பிடித்த ஒரு நபராலோ அல்லது குடும்பத்தினாலோ அல்லது நண்பர்களாலோ காயப்படுத்தப்பட்டு விட்டீர்கள் என்றால் உடனே சமூகவலைத்தளங்களில் அதனை ஸ்டோரியாகவோ, ஸ்டேட்டஸாகவோ போடும் பழக்கம் கொண்டிருந்தால் நீங்கள் பக்குவமற்றவர் என்று அர்த்தம்.

ஆம் உளவியலாளர்களின் கருத்து, இவ்வாறு வைப்பவர்கள் Immatured person என உங்களை நினைப்பார்களாம்.

பிரச்சினைகளிலிருந்து ஓட முற்படாதீர்கள்!
உங்களது அலுவலகம், பாடசாலை இவற்றில் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்யாமல் அவர்கள் முன்பு சென்று நின்றுவிட்டு, மற்றொருவரைக் காரணம் காட்டினால் நீங்கள் பக்குவமடையாதவர் என்று அர்த்தம்.

ஆகையால் பிரச்சினைகளை எதிர்க்கொள்ள காரணங்களை சொல்லாமல் மன்னிப்பு கேட்டாலே சரியாகிவிடும்.

சுய முடிவில் தடுமாற்றம்
தன்னால் இந்த வேலை செய்ய முடியும், இதனால் பின்னே ஏற்படும் பிரச்சினைகள் என்ன? நல்லது என்ன? என்பதை ஆராயாமல், மற்றவர்கள் கூறும் வழிகளில் நடந்தீர்கள் என்றால் நீங்கள் முதிர்ச்சியற்ற நபராகவே இருக்கிறீர்கள்.

மன்னிக்க தயக்கம்
உங்களது நண்பரோ அல்லது உறவினர்களோ ஏதேனும் தவறு செய்துவிட்டால், அதனை மன்னிக்க முடியாமல் மனதிலேயே வைத்திருந்தால் நீங்கள் நிச்சயமாகவே முதிர்ச்சியடையாத நபராக இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

ஆகையால் மன்னித்து முதலில் பேசுவது ஒரு நல்ல பழக்கம் இதுவே maturity ஆகும்.

ஒரு முதிர்ச்சியடைந்த நபர் அவர் மேல் தப்பு இருந்தால் மன்னிப்பு கேட்டு அதனை வாக்குவாதம் செய்யமாட்டார்

அதுமட்டுமல்ல தப்பு இல்லாத பட்சத்தில் இதனை பொருட்படுத்தமாட்டார். இதனால் அவரின் நேரமும் சேமிக்க படுகிறது.

கவலையான நபரிடம் நகைச்சுவை
கவலையாக பேசும் நபர்களைக் கண்டால் அவர்களிடம் நகைச்சுவையாக பேசி சிரிக்கவைத்தால் அவர்களை immature என்று கூறுவார்கள். ஏனெனில் ஒருவர் கவலையில் இருக்கும் தருணத்தில் அவரக்கு அனுதாபத்தை தெரிவித்து ஆறுதல் கூறும் நபர்கள் தான் முதிர்ச்சியடைந்தவர்கள் என்று கூறுவது உண்டு.

மற்றவர்களின் கருத்துகளை மதிக்காத நபர்
மற்றவர்களின் கருத்தினை தவறு என்று கூறி தான் கூறுவது தான் சரி என்று பேசும் நபர்கள் கொஞ்சம் கூட முதிர்ச்சியடைந்தவராக இருக்க முடியாது.

Recommended For You

About the Author: webeditor