பேலியகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் மனித பாவனைக்குத் தகுதியற்ற 30,000 கிலோ கெலவல்ல மற்றும் பலயா மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய, பாசியத்த பகுதியில் உள்ள 4 குளிர்சாதன அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த மீன், போக்குவரத்துக்காக லொறியில் ஏற்றப்பட்ட போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் குறித்த கிடங்கின் உரிமையாளரான நீர்கொழும்பு மாங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மனித பாவனைக்கு தகுதியற்ற மற்றுமொரு மீன்தொகை பேலியகொட மற்றும் சீதுவ பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.